இப்படி ஒரு நட்பா.. ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் கமல்.! யாரும் பார்த்திராத புகைப்படம்

திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அதே சமயம் படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவ ராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி,  தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் வெளி வருவதற்கு முன்பாக படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது அதன்படி ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை தொடர்ந்து காவாலா, ஹுக்கும் போன்ற பாடல்கள்..

பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனதை தொடர்ந்து showcase ரிலீஸ் செய்தது இதில் ரஜினியும் மிரட்டி இருந்தார். தற்பொழுது இந்த ட்ரெய்லர் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது உச்சத்தில் இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ரஜினி பற்றிய பேச்சுக்கள் அதிகமாக வருகின்றன. அந்த வகையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்து பட்டையை கிளப்பி படம் பாட்ஷா. படத்தில் ரஜினி மிகப் பெரிய  தாதாவாக நடித்திருப்பார்.

மேலும் படத்தின் ஒவ்வொரு சீனும் சிறப்பாக இருந்ததால் அதிக நாட்கள் ஓடியது.  பாட்ஷா படத்தின் ஷூட்டிங் இப்போது ரஜினியுடன் இணைந்து கமல், நெப்போலியன், செந்தில் ஆகியோர் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த பழைய புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

Rajini
Rajini
Rajini
Rajini

Leave a Comment