பேரன் மற்றும் மருமகனுடன் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் புகைப்படம்..

rajini diwali special : தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த், இவருக்கு வயது ஆனாலும் இன்னும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதுவும் இளமையுடன்.

வயதுக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை என தனது சிறந்த நடிப்பை இளம் நடிகர்களுக்கு இணையாக நடித்து வருகிறார், சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று தீபாவளியை பல பிரபலங்கள் மற்றும் நடிகர் நடிகைகள் அனைவரும் கொண்டாடி உள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் பலருக்கும் வாழ்த்துக் கூறி வந்தார்கள்.

அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தீபாவளியை தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா மருமகன், பேரன் என அனைவருடனும் கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் வெடி வெடிக்கும் போது எடுத்த புகைப்படங்களும் இணைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

Leave a Comment