சினிமாவிலும், நிஜத்திலும் ஒரே மாதிரியான குணத்தை வைத்திருக்கும் ரஜினி, அஜித்.! அட இவ்வளவு விஷயம் ஒத்து போகுதேப்பா..

திரை உலகில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் ரசிகர்களை கவர அவரது நடிப்பு மட்டுமே காரணமாக இருக்காது ஏனென்றால் அவரைப் பற்றிய அனைத்து செய்திகளையும் அறிந்த பிறகே அவருக்கு தீவிர ரசிகர்களாக இளைஞர்களும், மக்களும் மாறுகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வெற்றி / தோல்விகள் படங்களை கொடுத்திருந்தாலும் தமிழ் சினிமாவில் தற்போது அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜீத்.

இவர்கள் தற்போது தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்தால் கூட அவரது ரசிகர்கள் அவரை விட்டு பிரிய மாட்டார்கள் அந்த அளவிற்கு அவருக்கு பக்க பலமாக இருப்பதற்கு காரணம் சினிமாவையும் தாண்டி தன்னால் முடிந்த பல உதவிகளை ஏழை எளியோருக்கு மற்றவர்களுக்கு தெரியாமல் கொடுப்பது, அனைவரிடத்திலும் அன்பு காட்டுவது, வருபவர்களுக்கு அங்கு உபசரிப்பது என எல்லாவற்றிலும் கலக்குவதால் ரஜினி அஜித்திற்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் எப்பொழுதும் திரை உலகில் இருந்து கொண்டே இருக்கும் என பலரும் கூறுகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி அஜித் இருவரைப் பற்றியும், அதே சமயம் இவர்கள் இருவருக்கும் ஒத்துப் போகும் ஒருசில குணங்களை பற்றி தற்போது பார்ப்போம்.

ரஜினி அஜித் இருவரும் யாராவது ஒரு பெண்ணோ அல்லது குழந்தையை வந்து சந்திக்க வந்தால் அவருக்காக எழுந்து நின்று மரியாதை கொடுப்பது தற்போது வரையிலும் வழக்கமாக வைத்துள்ளனர் இது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் தன்னை நம்பி வருபவர்களுக்கு ஏதாவது ஒரு உதவி வேண்டும் என்றால் அதனை கேட்பதற்கு முன்பாகவே பல லட்சங்களை அள்ளி கொடுத்து அவரை மகிழ்விப்பேன் செய்வதில் ரஜினி, அஜித்துக்கு ஈடு இணை எவருமில்லை என கூறப்படுகிறது.

சினிமாவில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் ரஜினி, அஜித்தும் நன்கு மரியாதை கொடுபார்கள் அவர்களுக்கும் சினிமாவில் நல்ல ரோல் கொடுக்க வேண்டும் என விரும்புபவர்கள். மேலும்  ரஜினி அஜித் ஆகியோர் தனக்கு பெரிய அளவில் ரோல் இல்லாவிட்டாலும் முன்னணி நடிகர்களுக்கு எப்பொழுதும் ரோல் கொடுக்க வேண்டும் என அவர்களுக்கு கொடுக்க முனைப்பு காட்டுவார்கள் மேலும் அவர்களது நடிப்பை பார்த்து இவர்களே வியந்து பார்ப்பார்கள் அந்த அளவிற்கு ஆர்வம் கொண்டவர்களாக சினிமாவில் தற்போது இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் நடித்து வரும் ரஜினி அஜீத் இருவரும் தனது ரசிகர்களை நீங்கள் முதலில் உங்கள் வேலையை பாருங்கள் பிறகு வந்து எனது படத்தை பாருங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கொடுத்து அவர்கள் தனது படத்தை விட நீங்களே எங்களுக்கு முக்கியம் என கூறியவர்கள் இவர்கள் இருவரும் மட்டுமே.

ரஜினியும் அஜீத்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அதுபோல அஜித் ஆந்திராவைச் சேர்ந்த செகந்திராபாத்தில் பிறந்தவர்.

Leave a Comment