யாரு பார்த்த வேலைடா இது.? ரஜினி, அஜித்தை இப்படி செஞ்சது இணையதளத்தை கலக்கும் புகைப்படம்

Ajith : தமிழ் சினிமாவில் இன்று டாப் நடிகராக வருபவர் அஜித் குமார். துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில்  உருவாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு பல மாதங்கள் ஆகியும் எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை என்றாலும் விடாமுயற்சி படம் குறித்து சோசியல் மீடியாவில் செய்திகள் பரவுவது உண்டு அதன்படி விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடி த்ரிஷா என்றும்.. அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத் போன்றவர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்ததை..

தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட சூட்டிங் அஜார் பைஜானில் ஆரம்பிக்கப்பட போவதாக தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் யார் பார்த்த வேலை என்று தெரியவில்லை சட்டையை திறந்து விட்டு அரை டவுசர் உடன் அஜித் இருப்பது போன்ற போட்டோக்களை எடிட் பண்ணி  உள்ளார்கள்.

அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பீச்சில் அரைக்கால் டவுசரை போட்டு கொண்டு இருப்பது போன்ற புகைப்படங்களையும் வெளிவந்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் எவன் பார்த்த வேலைடா.. உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கலாய்க்கும் வகையில் விடாமுயற்சி படத்தில் அஜித், ரஜினி நடிக்கப் போகிறார்களா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் அடுத்த உங்கள் லிஸ்டில் யார் யார் இருக்கிறார்கள் எனக் கூறிய கலாய்த்து வருகின்றனர். இதோ ரஜினி மற்றும் அஜித் அரைக்கால் டவுசரில் இருக்கும் அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.