விஜய்க்கு எழுதிய கதையில் நடிக்கும் ரஜினி.! இயக்குனர் யார் தெரியுமா.? இனிதான் சிறப்பான தரமான சம்பவம் இருக்கு.!

0
darbar
darbar

பொதுவாக சினிமாவில் ஒருவருக்கு எழுதிய கதையில் மற்றொருவர் நடிப்பது இயல்பான ஒன்றுதான், இதுபோல் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடைபெற்று வருகிறது, இந்தநிலையில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பதாக இருந்த படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன.

சினிமாவில் ஒருவருக்கு எழுதிய கதையில் மற்றொரு நடிகர் நடிப்பது இயல்பான ஒன்று அதை சில இயக்குனர்கள் வெளிப்படையாக பல பேட்டிகளில் கூறியுள்ளார்கள், இப்பொழுது முன்னணி நடிகராக இருக்கும் பலர் இளம் நடிகராக இருக்கும் பொழுது இதுபோல் நிறைய படங்களை தவற விட்டுள்ளார்கள். இப்படி தவற விட்டு வேறொரு நடிகர் நடித்து மிகப் பெரிய ஹிட்டான படங்கள் நிறைய இருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் கதை தேர்வு செய்வதில் பல நடிகர்கள் சொதப்பி உள்ளார்கள், அதேபோல் விஜய் அவர்களின் கையில் இருந்து பல கதைகள் நழுவி சென்றுள்ளன அதற்க்கு காரணம் கதை பிடிக்காமல் இருக்கலாம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம். அப்படி அவர் தவற விட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அதேபோல் தல அஜித் அவர்கள் தவறவிட்ட பல திரைப்படங்களில் சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள், இதைப்போல் பல திரைப்படங்களில் அவருடன் நடிக்க இருந்த மற்றொரு நடிகர் நடித்துள்ளார்கள் அந்த திரைப்படங்கள் வெற்றியும் அடைந்துள்ளன தோல்வியும் அடைந்துள்ளன.

அப்படித்தான் 2012ம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வந்தது பின்னர் அந்தத் திரைப்படத்திற்கு யோகன் அதியாயம் என்று பெயர் வைத்திருந்தார்கள், ஃபர்ஸ்ட் லுக் வந்ததுடன் சரி அதன்பிறகு படம் ட்ராப் செய்யப்பட்டது, கதையில் சிறு குழப்பம் ஏற்பட்டதால் விஜய் அந்தத் திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

அந்தக் கதையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, சமீபகாலமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளார் கௌதம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இந்த செய்தி கிடைத்தவுடன் ரசிகர்கள் குஷி ஆகி விட்டார்கள். இந்த கதையை ரஜினியிடம் கௌதம் வாசுதேவ மேனன் கூறியதும் ரஜினியும் ஓகே சொல்லிவிட்டாராம் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளன.

அதிக பொருட்செலவில் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது, மேலும் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.