தமிழ் ரசிகர்கள் எந்த அளவிற்கு மற்ற மொழி திரைப்படங்களுக்கு தங்களது ஆதரவை அளித்து வருகிறார்கலோ அதேபோல தமிழ் திரைப்படத்திற்கும் மற்ற மொழி ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வருகிறார்கள். அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளிவரும் ஏராளமான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றி பெறவில்லை என்றாலும் உலக அளவில் வசூல் சாதனை பெற்றுவிடும்.
இந்தப் பெருமை எப்பொழுதும் ரஜினிக்கு இருந்து வந்தது.இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்காவில் இவர் நடித்திருந்த ‘2.0’திரைப்படத்தின் வசூல் சாதனையை கேஜிஎப் 2 திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவின் பாகுபலி, பாகுபலி-2, ஆர் ஆர் ஆர் மற்றும் 2.o ஆகிய நான்கு படங்களும் அதிக வசூல் சாதனை பெற்ற பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
அவற்றில் பாகுபலி 2 20 மில்லியன் டாலரையும், ஆர். ஆர்.ஆர் திரைப்படம் 14 மில்லியன் டாலரையும், பாகுபலி 8 மில்லியன் டாலரையும்,ரஜினியின் திரைப்படம் 5.5 மில்லியன் டாலரையும் வசூல் செய்தது. இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற கேஜிஎப் 2 திரைப்படம் 6 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு ரஜினியின் 2.o திரைப்படத்தின் வசூல் சாதனையை பின்னுக்குத் தள்ளி kgf திரைப்படம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.பிறகு முதன்முறையாக கன்னடத் திரைப்படம் அமெரிக்காவில் 6 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.