ரஜினியின் 169 வது திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்களா.. வெளிவந்த சூப்பர் அப்டேட்.!

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்தா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு இளம் இயக்குனர் நெல்சன் உடன் கதை கேட்டு தற்போது இணைய உள்ளார் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதால் ரஜினி நெல்சனை தேர்வு செய்தார்.

மேலும் ரஜினி இதற்கு முன்பாக சிறந்த இயக்குனர்கள் பலருடன் கதை கேட்டு வைத்திருந்தாலும் நெல்சன் சொன்ன கதை ரொம்ப பிடித்துப் போனதால் ஓகே சொல்லிவிட்டாராம். இருப்பினும் இந்த படத்திற்கு முன்பாக நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

ரஜினியும் பார்த்துவிட்டு அதிர்ச்சியானார் இப்படி ஒரு இயக்குனருடனா கைகோர்க்க போகிறோம் என படத்தை பார்த்து விட்டு சற்று நேரம் யோசித்தார். இருப்பினும் நெஞ்சனிடம் திறமை இருக்கிறது என நம்பியே அவருடன் இந்த படத்தில் பணியாற்ற இருக்கிறார் ரஜினி இந்த படத்தின் கதைப்படி மொத்தம் மூன்று ஹீரோயின்கள் ரஜினியுடன் நடிக்கின்றனர்.

முதல் ஹீரோயின்னாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிக்கு வில்லியாக  ரம்யா கிருஷ்ணனும் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளி வருகின்றன. கேரளா நடிகையான பிரியங்கா அருள்மோகன் இந்த படத்தில் ரஜினியின் மகளாக அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிவிக்கின்றன.

அண்ணாத்தா படம் போல இந்த படத்திலும் பல டாப் நடிகர் நடிகைகள் நடிப்பதால் படம் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர் நோக்கி இருக்கின்றனர். இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.