ரஜினி நடித்த ”சிவாஜி” படத்தில் மட்டும் இவர் வில்லனாக நடித்திருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா.!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது தனித்துவமான நடிப்பு திறமையின் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவாஜி.

இத்திரைப்படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான ஷங்கர் அவர்கள் இயக்கியிருந்தார்,ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது, இப்படத்தை எ ஆர் ரகுமான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நடைமுறைக்கு அப்பாற்பட்ட கதையாக இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் இப்படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றினார். அதுமட்டுமில்லாமல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இப்படத்தில் ரஜினிக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் அமைந்திருந்தது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் ஆதிகேசவன் என்ற கேரக்டரில் சத்யராஜ் அவர்கள் முதலில் நடிக்க இருந்தார். சத்தியராஜ்க்கும், ரஜினிக்கும் ஏற்கனவே நேரடியாக பல பிரச்சினைகள் இருந்ததால் இப்படத்தில் இருந்து அவர் விலகினார்.

இதனை தொடர்ந்து தான் சுமன் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தனது திறமையைக் வெளிக் காட்டி தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சத்தியராஜ் அவர் நடித்திருந்தால் இப்படம் விஸ்வரூப வெற்றியாக மாறியிருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Comment