50 நாள் ஓட வேண்டிய படம் இனி 25 நாள் தான் ஓடும்.! விஜய்யை மிரட்டிய அரசியல் பிரபலம்.!

0
Vijay
Vijay

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் புரமோஷன் வேலையில் படக்குழு மும்முரமாக இருக்கிறது, பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது, இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதுதான் இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக விஜய் பொதுமேடையில் அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார், அதனால் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பற்றி பேசியதால் எதிர் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா, விஜய் பற்றி விமர்சித்துள்ளார்.

அவர் பேசியதாவது விஜய் முதலமைச்சரை குறிப்பிட்டு பேசவில்லை என்று தான் நினைக்கிறேன் ஒருவேளை அப்படி பேசியிருந்தால் 50 நாள் ஓட வேண்டிய படம் இனி 25 நாள்தான் ஓடும், மோடியை பற்றி பேசியிருந்தால் அவருக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என மறைமுகமாக விஜயை தாக்கி பேசியுள்ளார்.