ராஜமௌலினா சும்மாவா: நடிகர் ராம்சரண் பிறந்தநாளை சினிமா ரேஞ்சுக்கு கொண்டாடிய “RRR” படக்குழு.

சினிமாவில் யாரும் பார்த்திராத  வித்தியாசமான திரைப்படங்களை மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கி கோடிகளில் வசூல் வேட்டையை நடத்த முடியும் என்பதை இந்திய சினிமாவிற்கு எடுத்துக்கூறிய இயக்குனர்கள் வெகுசிலரே ஆனால் அதிலும் தற்போது முதன்மையானவராக இருப்பவர் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி.

இவர் இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் போன்ற முன்னணி ஜாம்பவான்கள் நடிப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது.

இதை தொடர்ந்து ராஜமௌலி தற்போது ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி, ராகுல் ராமகிருஷ்ணா போன்றவர்கள் புதிதாக கூட்டணி அமைத்து RRR என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இப்படத்தின் பட்ஜெட் 400 கோடியாக இருப்பதால் அதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு சீனையும் வேற லெவலில் செதுக்கி வருகிறார் இயக்குனர்.

இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 13-ம் தேதி வெளியாக உள்ளது இதற்கான வேலைகளை தற்போது படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது .

இந்த படம் முழுக்க முழுக்க சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. கதை விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜமௌலி ஒவ்வொரு நடிகர் நடிகைகள் காட்சிகளை மக்கள் ரசிக்கும் படி உருவாக்கி வருகிறார்.

அந்த வகையில் ஹீரோயின் ஆலியா பட் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹீரோ ராம் சரண் சீதா ராஜாராமு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆலியா பட்டின் சீதையாக மாறி இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜமௌலி ராம்சரனின் சீதாராஜாராமு கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தற்பொழுது ரசிகர்களுக்கு விருந்து அளித்தார்.

அதற்கு அடுத்த நாளே ராம்சரனின் பிறந்தநாளை RRR பட குழு மிக பிரமாண்டமாக கொண்டாடியது அந்த வீடியோவை பார்த்த பலரும் மெய்சிலிர்த்துப்  பார்த்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment