பாகுபலி படத்தால் மனம் நொந்து போன ராஜமௌலி.. பல வருடம் கழித்து வெளிவரும் உண்மை

சிறந்த இயக்குனர்கள் லிஸ்டில் எப்பொழுதும் தனக்கான ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் ராஜ மௌலி, இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களை தான் இயக்கி உள்ளார் ஆனால் அந்த ஒவ்வொரு படமுமே வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது இருந்தாலும் இவருடைய கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படம் நான் ஈ.

அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் பாகுபலி என்னும் படத்தை எடுத்தார் இந்த படத்தில் தமன்னா, பிரபாஸ், சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர் படம் வெளிவந்து 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது இதனை தொடர்ந்து பாகுபலி 2 திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

அதன் பிறகு ராஜமவுலி பெரிய அளவில் பேசப்பட்டார். இவர் கடைசியாக ஜூனியர் என்டிஆர் ராம்சரனை வைத்து RRR என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் பண்ண போவதாக ஏற்கனவே கூறினார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பாகுபலி திரைப்படம் மோசமான படம் என ஒரு பேட்டியில் அவர் சொன்னது தற்பொழுது வைரலாகி வருகிறது பாகுபலி முதல் பாகத்திற்கு வந்த விமர்சனங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை அந்த படமானது தமிழ்நாடு, கேரளா, வட இந்தியா, அமெரிக்கா, துபாய் ஆகிய இடங்களில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.

ஆனால் ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இது மோசமான படம் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவும் என பேசினர். தொடர்ந்து மூன்று வருடங்களாக என்னை ஆதரித்த தயாரிப்பாளர் குறித்து வருந்தினேன் அவர் இந்த படத்திற்காக நிறைய பணம் செலவிட்டார் அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்வது என தெரியாமல் தவித்தேன் என்றார்.

Leave a Comment