“RRR” படத்தை எடுக்க முடியாமல் திண்டாடும் ராஜமௌலி.! தண்ணி காட்டும் நடிகர்கள்.! புலம்பும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்.

வசூலில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்த பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலி இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக “RRR” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

இந்த திரைப் படத்தின் சூட்டிங் 2018 இல் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தை 2021 பொங்கல் அன்று படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டம் போட்டது ஆனால் சொல்லியப்படி படக்குழுவால் நிறைவேற்ற முடியாமல் போனது.

இதன் பிறகாவது படத்தை மக்களுக்கு உடனே கொடுக்க வேண்டும் என படக்குழு முனைப்பு காட்டி னாலும் அந்த சமயத்தில் கொரோனா தொற்று அலை வீசியதால் படம் தள்ளிப்போனது அதன் பிறகாவது அக்டோபர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு முனைப்பு காட்டியது அதற்குல் படத்தில் நடிக்கும் நடிகர்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் அடுத்தடுத்த படத்தின் ஷூட்டிங் இருந்ததால் அங்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அந்தவகையில் ராம் சரண் தனது தந்தையுடன் இணைந்து “ஆச்சார்யா” என்ற ஒரு புதிய திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிகர் ராம் சரணும் இந்தப் படத்திற்காக பெருமளவும் ஆர்வம் காட்டுவதால் RRR சூட்டிங்கில் பெருமளவு கலந்து கொள்ளாமல் போனார்.

அதேபோல ஜூனியர் என்டிஆர் மற்ற படங்களில் அவ்வபோது நடித்து வருவதால் படத்தின் ஷூட்டிங் நாட்கள் இழுத்துக்கொண்டே சென்ற இந்த நிலையில் கொரோனா அலை வீசுவதால் தற்போது படக்குழு அக்டோபரில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கிறது.

மேலும் எப்படியும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இந்த திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என தயாரிப்பாளரும் இயக்குனரும் புலம்பிக்கொண்டே இருக்கின்றனராம்.

மேலும் இந்த திரைப்படம் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக எடுத்து வருவதால் மற்ற நடிகர் நடிகைகளும் வேறு சில படங்களில் கமிட்டாகி  நடித்து வருவதால் சரியான நேரத்தில் அனைத்து நடிகர்களும் இந்த திரைப்படத்தில் கலந்து முடியாமல் போகிறது எது எப்படியோ ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட்ட திட்டம் போட்டு உள்ளதாம்.

Leave a Comment