பேட்டியில் தல அஜித்தை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து தள்ளிய ராஜமௌலி..! இந்த மனசு யாருக்குத்தான் வரும்..!

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு அதில் மிகப் பிரபலமாக பயணித்து வரும் இயக்குனர் என்றால் அவர் ராஜமவுலி தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரை முன்வைத்து ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தால் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இந்த ஆண்டின் டாப் 10 வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் கோல்டன் குளோப் விருதுக்கு ராஜமௌலி இயக்கிய ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படம் ஆனது பெஸ்ட் நான் இங்கிலீஷ் மூவி மற்றும் பெஸ்ட் சாங் என இரண்டு பிரிவுகளில் நாமினேட் ஆகியுள்ளதாக தற்பொழுது தெரியவந்துள்ளது.

மேலும் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் ராஜமவுலி அவர்கள் இந்தியாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார் இன் நிலையில் இயக்குனர் ராஜமவுலி அவர்கள் தல அஜித்தை பற்றி பேசி உள்ள தகவல் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் பல நடிகர்கள் விக் மாட்டிக்கொண்டு மற்றும் தலைமுடிக்கு டை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் தலைமுடிக்கு டை அடிக்காமலும் மேக்கப் இன்றி தன்னுடைய  ஒரிஜினல் முகத்தோற்றத்தில் நடிக்கலாம் என்று நிரூபித்தவர் தான் தல அஜித் என அஜித்தை பற்றி பேட்டியில் ராஜமவுலி பேசி உள்ளார்.

அது மட்டும் இல்லாமல் பல ஹீரோக்கள் தங்களுடைய வயதினை வெளி காட்டுவதற்கு  தயங்கி வரும் நிலையில் தல அஜித் அதையெல்லாம் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார் என ராஜமாவலி அஜித்தை பற்றி புகழ்ந்துள்ளார்.

Leave a Comment