ராஜமௌலி பிரமாண்டமாக இயக்கம் RRR படத்தின் மோஷன் போஸ்டர் இதோ.!

சினிமா திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்எஸ் ராஜமவுலி. தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். ராஜமௌலி அவர்கள் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொடர்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலி அவர்கள் 2001 ஆம் ஆண்டு ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற திரைப்படத்தை தெலுங்கில் இயக்கினார் இதுவே அவருக்கு முதல் படம் ஆகும். இதனைத் தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார் அதிலும் குறிப்பாக மகதீரா, நான் ஈ, மரியாத ராமண்ணா, ராஜண்ண போன்ற வெற்றிப் படங்களை இயக்கியிருந்தார்.

இதையடுத்து 2015ஆம் ஆண்டு பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய திரைப்பட அளவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் உலக அளவிலும் பேசபட்ட படமாக இது அமைந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும் ,வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதனை தொடர்ந்து ராஜமௌலி அவர்களுடைய இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தார் இப்படமும் பெரிய வசூல் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ராம்சரண் அவர்களை வைத்து தற்போது RRR என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

ரத்தம், ரணம், ரவுத்திரம் என்று தலைப்பு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் 400 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படம் எடுக்க தாமதம் ஆகி உள்ளதால் இப்படம் 2021 ஜனவரி எட்டாம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் சமுத்திரகனி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இதோ அந்த RRR மோஷன் போஸ்டர்

Leave a Comment

Exit mobile version