ராஜமௌலி, அட்லீயுடன் மோதுவது தேவையில்லாதது – எனக்கு இதுபோதும்..! மிஷ்கின் பேட்டி.

தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி பின் வெற்றி படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் இயக்குனர் மிஷ்கின். இவர் தற்பொழுது ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதி ஆகியவர்களை வைத்து பிசாசு 2 என்னும் திரைப்படத்தை விறுவிறுப்பாக எடுத்து முடித்துள்ளார் படம் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது.

இதற்கு முன்பாக மிஷ்கின் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான் குறிப்பாக சைக்கோ, துப்பறிவாளன், அஞ்சாதே, யுத்தம் செய், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கி வெற்றிகொண்டுள்ளார் தற்பொழுது இந்த வரிசையில் பிசாசு 2 படமும் இணையும் என பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மிஷின் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.. நேற்றைய நேர்காணல் ஒன்றில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அப்பொழுது அவரிடம் கேட்கப்பட்டது.

வெளிநாட்டு படங்கள் போல் பாடல்கள் இல்லாமல் படம் எடுக்கலாமே என்று கேள்வி கேட்டனர் அதற்கு பதில் அளித்தவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பாடல்கள் இல்லை நானும் பெரிதாக பாடல்களை விரும்பமாட்டேன் ஆனால் வெளிநாட்டில் படங்களின் சூழ்நிலை வேறு நமது சூழ்நிலை வேறு அங்கு படத்தில் பாடல் இல்லாவிட்டாலும்..

இசைக்குழுக்கள் தனியாக இயங்குகின்றன நமக்கு அப்படி கிடையாது இளையராஜாவின் இசை இல்லை என்றால் நாம் வாழ்வு நாசமாக இருக்கும் அதனால் பாடல்கள் இருப்பது தவறு இல்லை எனக் கூறினார்.. ஏன் பிறமொழி பக்கம் போய் படங்களை எடுக்கவில்லை..

எனக்கு தமிழ் படம் எடுக்கத்தான் மகிழ்ச்சி ஆந்திரவுக்கு சென்று ராஜமௌலியுடன் போட்டி போட வேண்டும் என்றோ அல்லது அட்லீ ஹிந்தி படம் எடுக்க சென்றுவிட்டார்  நானும் அவருக்கு போட்டிக்காக ஹிந்தி படம் எடுக்க வேண்டும் என்றோ எனக்கு விருப்பமில்லை தமிழ் பார்வையாளர்கள் மிகவும் நேர்மையானவர்கள் அவர்கள் எனக்கு போதும் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

Leave a Comment