கடந்த மாதம் வெளியான படம்தான் RRR (ரத்தம் ரணம் ரௌத்திரம்), இப்படத்தில் மிகப் பிரபலமான நடிகர்களான ராம் சரண் மற்றும் என்டிஆர் நடித்திருந்தனர். மேலும் எந்த படம் எடுத்தாலும் பிரமாண்டமாக எடுக்கும் இயக்குனர் ராஜமௌலி தான் இப்படத்தின் இயக்குனர். இப்படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
மேலும் இப்படம் வெளியான இரண்டே வாரத்தில் 900 கோடி வசூலை பெற்றுத் தந்தது. இப்படம் அமீர்கானின் பிகே படத்தையும்,அக்ஷய் குமாரின் 2.0 படத்தையும் தாண்டி அதிகமான வசூலைப் பெற்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக நேற்று இரவு சக்சஸ் மீட்டிங் நடைபெற்றது.
இந்த மீட்டிங்கில் படக்குழுவின் அனைத்து முக்கிய ஆட்களும் பங்கேற்றனர் மேலும் ராம் சரண்,என்டிஆர், ராஜமவுலி மற்றும் கதையாசிரியர் விஜய பிரசாந்த் ஆகியவர்கள் முக்கியமான இடத்தில் பங்கேற்றனர். அந்த மீட்டிங்கில் ராம்சரண் படத்தின் வெற்றியை குறித்து சில கருத்துகளை பதிவு செய்தார் “RRR திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என நான் எதிர்பார்ப்பதாகவும் ஆனால் உலக அளவில் நம்பர் ஒன் படமாக மாறும் என எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் வரும் படங்கள் நிச்சயமாக வெற்றியை பெற்று தரும் என்று அனைவரும் நம்பினர்கள் அந்நம்பிக்கை பொய்யாகாமல் காப்பாற்றப்பட்டது. ஏனென்றால் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான பாகுபலி மற்றும் பாகுபலி 2 இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அதேபோல இப்படமும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. இதைத்தொடர்ந்து தான் நேற்று இரவு சக்சஸ் மீட்டிங்கில் ராஜமவுலி RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு உற்சாக நடனம் ஆடினார். இயக்குனர் ராஜமவுலி படம் வெளியாவதற்கு முன்பு என்டிஆரிடம்,படம் நல்ல வரவேற்பை பெற்றால் நான் கண்டிப்பாக நடனம் ஆடுவேன் என்று கூறியிருந்தார்,அதை தற்போது நிறைவேற்றினார்.

இப்படம் பார்த்த ரசிகர்கள் இடையே படத்தை பற்றி கேட்ட பொழுது, ரசிகர்கள் கூறியது,”இப்படத்தில் வரும் காட்சிகளைப் பார்க்கும் போது எனது உடல் புல்லரிக்கிறது” என்று கூறியுள்ளனர். 900 கோடியை வசூல் செய்த இப்படம் ஆயிரம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.