கமலின் பத்தல பத்தல பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடிய ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா.! வைரலாகும் வீடியோ.

விஜய் டிவியில் டிஆர்பி யில் டாப்பில் இருக்கும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீசன்2. இந்த சீரியலின் முதல் சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து இரண்டாவது சீசன் இயக்குனர் பிரவீன் பெண்ணெட் எடுத்து வருகிறார்.

இந்த சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது சரவணனின் தங்கை பார்வதி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் தவிக்கின்ற நிலையில் அவரை சரவணன் மற்றும் சந்தியா போலீஸின் உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளனர் இப்படி தற்போது கதையில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அர்ச்சனா இவர் இதற்கு முன் தொகுப்பாளராக பயணித்தவர் பின்பு விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் ராஜா ராணி சீரியலில் காமெடி வில்லியாக நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் அர்ச்சனா ஒரு காமெடி பீஸ் சமீபத்தில் நடந்த விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கூட விருது வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோஷியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு எண்ணற்ற ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கும் அர்ச்சனா கடந்த ஜூன் 3 ஆம் தேதியன்று  பலரும் எதிர்பார்த்த கமலஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் வெளியாகியது.

இந்தப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளி வருகிற நிலையில் இந்த படத்தில் கமல் குரலில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகியது.

அந்த ட்ரெண்டிங் பாடலுக்கு தற்போது அர்ச்சனா புதிய கெட்டப்பில் ஸ்டைலாக நடனமாடி அவரது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன இதோ அந்த வீடியோ.

Leave a Comment