Alya manasa : விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்றால் அது ராஜா ராணி சீரியல் ஆல்யா மானசா மற்றும் கார்த்திக் ஜோடி தான். ராஜா ராணி சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்திருந்தார் அதேபோல் சின்னைய கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார் இவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருகிறார்கள்.
ஆல்யா மானசா இதற்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது மானஸ் என்பவரை காதலித்து வந்தார் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி அடிக்கடி ஊர் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியல் முடிவடைந்த நிலையில், சஞ்சீவ் மற்றும் மானசா இருவரும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள் அங்கு ஆல்யா மானஸா அரைகுறை உடையுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மானசாவை கிண்டலடித்து வருகிறார்கள், ராஜா ராணி சீரியல் நிறைவடைந்து உள்ளதால் இவர் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளன.



