அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் பிகில், இந்த திரைப்படத்திற்கு முன்பு தெறி, மெர்சல் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து ஹிட்டானது, இந்த நிலையில் பிகில் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறிக் கொண்டே போகிறது.
இந்தநிலையில் பிகில் திரைப்படத்தை வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள், அதற்காக இரவு பகலாக படக்குழு உழைத்து வருகிறார்கள் இந்த நிலையில் அடிக்கடி புதிய போஸ்டரையும் வெளியிட்டு வருகிறது படக்குழு.
தற்போது வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் அக்டோபர் 12ஆம் தேதி 6 மணிக்கு டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள், இந்த போஸ்டரில் நயன்தாரா ராஜா ராணி படத்தில் ரெஜினா போலவே திருமண கோலத்தில் இருக்கிறார்.
