ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசாவிற்கு பதிலாக புதிதாக என்ட்ரி கொடுக்கும் ரியா.! புகைப்படத்துடன் இதோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி. பொதுவாக ஒரு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டால் அதனை  இரண்டாவது, மூன்றாவது போன்ற சீசன்கள் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  அந்த வகையில் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அந்த சீரியலின் இரண்டாவது பாகம் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் டிஆர்பி-யில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் சீரியலாகவும் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஆலியா மானசா மற்றும் இவருக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலின் ஹீரோவான சித்து நடித்து வருகிறார்.

இவ்வாறு விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வருவதற்கு முக்கிய காரணமாக இந்த ராஜா ராணி சீரியலும் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆலியா மானசா நிஜவாழ்க்கையில் கர்வமாக இருந்து வருவதால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

எனவே திடீரென்று இவர் விலகியதால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் அடிவாங்கும் என்று கருதப்படுகிறது. இருந்தாலும் வேறு வழியில்லை தற்பொழுது ஆலியா மானசா  நடித்து வந்த சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன்  என்ற நடிகை என்றி கொடுக்கவுள்ளார்.

ரியா என்பவர் சென்னை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலின் நெருங்கிய நண்பராம் எனவே ஆலியா மானசா நடித்து வந்த கதாபாத்திரத்தில் தற்காலிகமாக ரியா நடிப்பதற்கு விஷால் தான் உதவி புரிந்தாராம்.

எனவே தற்பொழுது ரியா நடித்து வரும் எபிசோடுகளில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

reeya
reeya

Leave a Comment