வெள்ளித்திரையில் அறிமுகமாகும் “ராஜா ராணி 2” பிரபலம்..! இதோ புகைப்படம் – ரசிகர்கள் மகிழ்ச்சி.

விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 என்ற தொடர் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ராஜா ராணி முதல் சீசனை ஆலியா மற்றும் சஞ்சீவ் இவர்களை வைத்து பிரவீன் பென்னெட் இயக்கி வந்தார். முதல் சீசன் எதிர்பாராத அளவு வெற்றியடைந்தது..

மற்றும் இந்த சீசனில் நடிகர் நடிகைகளாக நடித்து வந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும்.. திருமணம் செய்து கொண்டு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்ற நிலையில் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரவீன் பென்னெட் இரண்டாவது சீசனை..

ஆலியா மற்றும் சித்து என்ற சீரியல் நடிகரை வைத்து தொடங்கினார் இந்த சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் நடித்து வரும்போது ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலக அவருக்கு பதில் ரியா என்ற பிரபலம் தற்போது மாற்றப்பட்டு நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் ராஜா ராணி சீசன் 2 சீரியல் நடிகர் சித்து இதற்கு முன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கல்யாணம் என்ற சீரியலில் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக அந்த சீரியலில் ஸ்ரேயா என்ற சீரியல் நடிகை நடித்து வந்தார் இருவரும் இந்த சீரியலின் போது காதலித்து ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

sidhu
sidhu

இந்த நிலையில் ரசிகைகள் பலரின் ஃபேவரட் நாயகன் சித்து குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. சித்துவிற்கு சினிமா பட வாய்ப்புகள் நிறைய வந்த வண்ணம் இருக்கின்றதாம் அதனால் அவர் கூடிய விரைவில் படங்களில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

Leave a Comment