அட நம்ம ராஜ்கிரன் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா. இவரின் உண்மையான பெயர் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் 80களில் நடிக்க ஆரம்பித்து இன்று வரை நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் பலர் இருக்கிறார்கள், அப்பொழுது இருந்த கதாநாயகன் கதாநாயகியாக நடித்த பலரும் இப்பொழுது அப்பா அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்னும் நடிப்பில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர் என்றால் ராஜ்கிரண் தான்.

அன்றிலிருந்து இன்றுவரை நடிப்பில் கலக்கிக்கொண்டு இருக்கும் ராஜ்கிரண் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரன் எளிய குடும்பத்தில் பிறந்தவர் இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார் இவர் நடிகராக பணியாற்றுவது மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

அதேபோல் ராஜ்கிரணின் உண்மையான பெயர் காதர் மொகிதீன் இந்த பெயரை சினிமாவுக்காக ராஜ்கிரன் என மாற்றிக் கொண்டார், ராஜ்கிரணுக்கு சினிமாவில் பேரும் புகழும் இருந்தாலும் இதுவரை இவர் 30 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார், ஆரம்ப கட்டத்தில் இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆக தான் இருந்தார் அதன்பிறகு தான் நடிகனாக உருவெடுத்தார்,.

தமிழில் இவர் முதன்முதலாக நடிகராக அரண்மனைக்கிளி என்ற திரைப் படத்தில் தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து என் ராசாவின் மனசிலே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் இன்னும் இந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம், அதன்பிறகு ராஜ்கிரன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் சண்டக்கோழி பாண்டவர்பூமி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

rajkiran

இவரிடம் பிரபல கம்பெனி ஒன்று வேட்டி விளம்பரத்தில் நடிப்பதற்கு அணுகியது அப்பொழுது சம்பளம் ஒன்றரை கோடி பேசப்பட்டது ஆனால் இந்த பணத்தை ஏழை மக்களிடம் விற்கும் அந்த வேட்டி சட்டையில் வைத்துதான் லாபம் பார்ப்பீர்கள் என்று கூறி அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார், கடைசியாக ராஜ்கிரன் சண்டக்கோழி திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார் அதேபோல் இவர் கதாநாயகனாக நடித்த பவர் பாண்டி திரைப்படம் ஹிட்டடித்தது.

இவருக்கு இரண்டு திருமணம் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது பின்னர் ராஜ்கிரணின் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் இந்த நிலையில் இவர்களது குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

rajkiran

Leave a Comment

Exit mobile version