ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு இத்தனை வருடத்திற்கு முன்பு லிவ்விங் டூ கெதரில் இருந்ததாக கூறிய ரைசா.! வைரலாகும் தகவல்

0

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது, ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவது போன்றவற்றை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனை ஒரு தரப்பு ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஒரு சிலர் திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் ரைசா வில்சன். இவர் மாடலிங்காக பணியாற்றி வந்தார் அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த வந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோன்று இந்நிகழ்ச்சி இருக்க பின்பு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதல் காட்சிகள் ரொமான்ஸ் என்று இருந்ததால் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தார்.  இத்திரைப்படத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இதுவரையிலும் எந்த திரைப்படமும் இவர் நடிப்பில் வெளிவர வில்லை.

அதோடு சமீபத்தில் சர்ஜரி செய்து கொள்வதற்காக மருத்துவரை அணுகி தனது முகத்தை வீணாக்கி கொண்டதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். தற்பொழுது தான் முகத்தில் இருந்த காயம் சரியாகி பழைய நிலைமைக்கு மாறி உள்ளார்.

எனவே மீண்டும் ரைசா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களிடம் பேசும்பொழுது ரசிகர் ஒருவர் கடைசியாக நீங்கள் காதல் மற்றும் லிவிங் டுகெதரில் எப்பொழுது இருந்தீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.

அதற்கு 2016 தான் என்னுடைய கடைசி ரிலேஷன்ஷிப் இருந்தது என்று கூறினார். ரைசா ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வெளிப்படையாக இதனை கூறியதால் இது கொஞ்சம் பெரிய விஷயம் தான் என்று கூறிவருகிறார்கள்.