இணையதளத்தை ஸ்தம்பிக்க வைக்கும் ராய் லக்ஷ்மி வீடியோ.!

கவர்ச்சி நடிகையாக தற்போது இணையதளத்தில் கலக்கி வருபவர் நடிகை ராய் லட்சுமி.  இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

நடிகை ராய் லட்சுமி தமிழ், மலையாளம் என்று இரண்டு திரையுலகிலும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து குண்டக்க மண்டக்க,  தர்மபுரி, பருந்து, தாம் தூம், முத்திரை, வாமனன்  உட்பட இன்னும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனது முத்திரையைப் பதித்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம்,தமிழ் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் விளம்பரங்களில் மாடலாக தான் தனது கெரியரை தொடங்கினார்.  அந்த வகையில் புரு காபி, சரவணா ஸ்டோர் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் ராய் லட்சுமி சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.அந்த வகையில் தற்போது தனது உடல் எடையை குறைப்பதற்காக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment