ஆடையை வைத்து திகிலில் மிரட்டிய லட்சுமிராய்.! வைரலாகும் சின்ரெல்லா ட்ரெய்லர்.

cinderella  : லட்சுமி ராய் நடிப்பில் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சின்ரெல்லா இந்த திரைப்படம் ஃபேண்டசி ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தை எஸ் எஸ் ஐ புரோடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியிடப் பட வேண்டியது ஆனால் ஒரு சில காரணங்களாலும் படத்தின் பணிகள் முடிவடையாததால் தாமதமாக வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது படத்தின் மொத்த பணியும் முடிவடைந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி திரைப்படம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சின்றல்லா திரைப்படத்தின் முன்னோட்டமாக ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரைலரை முன்னணி நடிகர் தனுஷ் தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதற்கு படக்குழுவினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். லட்சுமிராய் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பதற்காக பல போட்டோஷூட் நடத்தி சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.

மேலும் இவர் எப்படியாவது முன்னணி நடிகை அந்தஸ்தை பெற வேண்டும் என்பதற்காக கவர்ச்சியில் இறங்கி நடித்துள்ளார் ஆனால் இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகரின் திரைப் படத்திலும் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார் அந்த வகையில் இந்த திரைப்படம் இவருக்கு கைகொடுக்கும் என பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்.

Leave a Comment