ராகுல் டிராவிட் இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக மாறக் கூடாது – முன்னாள் வீரர் அதிரடி பேச்சு.? ஷாக்காக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்.

0

இந்திய அணி  தற்போது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது ஏனென்றால் இந்திய அணி இங்கிலாந்து உடனான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது அதே சமயம் இலங்கை அணியுடனான போட்டியிலும் விளையாட உள்ளது.

இதனால் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்ட முன்னணி வீரர்களை தற்போது அங்கேயே தக்க வைத்து விட்டது மேலும் திறமைவாய்ந்த அதேசமயம் இளம் வீரர்களை வைத்து இலங்கை அணியுடன் மோத இந்திய அணி இளம் வீரர்களை தயார் செய்து உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளர் ஆக ராகுல் டிராவிட் செயல்படக் கூடாது என இந்திய அணியின் முன்னாள்  வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

அவர் கூறியது : ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக மாறக்கூடாது ஏனெனில் தற்போது உள்ள 19 வயதிற்குட்பட்ட அணி மற்றும் இந்திய ஏ அணியை கடந்த ஆண்டுகளாக சரியாக கட்டமைத்து சிறப்பான வீரர்களை இந்திய அணிக்கு வழங்குகிறார்.

மேலும் ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் இருந்து வருகிறார். டிராவிட் தொடர்ந்து திறமையான இளம் வீரர்களை உருவாக்க வேண்டும் அவர் இந்த பணியை இந்திய அணிக்கு செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவருக்கு முழு நேர பயிற்சியாளராக இந்திய அணியில் போடக்கூடாது என அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.