சூர்யாவின் நடிப்பை பார்த்து மிரண்டுபோன கிரிக்கெட் வீரர் ரஹானே.. படத்தை பார்க்க சொன்னதே இந்த பிரபலம் தானாம்.. பின் என்ன சொன்னார் தெரியுமா.?

0

சூர்யாவின் ஒவ்வொரு திரைப்படமும் புதிய மைல்கல்லை எட்டுவது வழக்கம். அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று.

இத்திரைப்படத்தைப் பார்த்த ஒவ்வொரு பிரபலங்களும், ரசிகர்களும் சூரியாவை புகழ்ந்தும், படத்தையும் பாராட்டித் தள்ளினர். மேலும் இது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடிக்கவே  நடிகருக்கு தில்லு இருக்க வேண்டும் அப்படி நடித்த சூர்யாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் பலரும் வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக வலம் வரும் ரஹானே சமீபத்தில் சூரரை போற்று திரைப்படத்தைப் பார்த்து உள்ளார்.

சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் அக்டிவாக இருக்கும் ரஹானே ரசிகர்களுடன் உரையாடும் வழக்கம். அப்படி உரையாடும் போது ரசிகர் ஒருவர் நீங்கள் சமீபத்திய பார்த்த திரைப்படம் எது என கேட்க சூரரைப்போற்று.

அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது அதிலும் பிரமாண்டமாக சூர்யாவின் நடிப்பு இருந்தது என தெரிவித்தார் இந்த படத்தை பார்க்க முதலில் அஸ்வின்  எனக்கு பரிந்துரைத்தார் எனவும் வெளிப்படையாக கூறினார்.

rahane
rahane

கிரிக்கெட் வீரர்களே சூர்யாவின் நடிப்பை புகழ்ந்து பேசி உள்ளதால் சூர்யாவின் ரசிகர்கள் தற்போது புகழின் உச்சிக்கே சென்று தலை கால் புரியாமல் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

சிறப்பான திரைப்படம் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பை பெறும் அதற்கு சூரரைப்போற்று திரைப்படமும் ஒரு உதாரணம்.