சினிமாவில் எப்பொழுதும் ஹீரோவுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும், அதேபோல் வில்லனாக நடிக்கும் ஒரு சிலருக்கு மட்டும் தான் ரசிகர் பட்டாளம் இருக்கும் அந்த வகையில் வில்லனாக நடித்த ரகுவரனுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம்.
நடிகர் ரகுவரன் தமிழில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து தமிழில் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார், அதுமட்டுமில்லாமல் சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
பின்பு ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், பாஷா திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியது, இதை யாராலும் மறுக்க முடியாது, அதன்பிறகு தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தார் பின்பு 1996ம் ஆண்டு நடிகை ரோகிணியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ரிஷிவரன் என்ற மகன் இருக்கிறார். ஆனால் இந்த தம்பதிகள் திருமண வாழ்க்கை ஒத்து வராததால் 6 வருடத்திலேயே விவாகரத்து பெற்றார்கள்.
இந்த நிலையில் நடிகை ரோகினி தனது மகன் ரிஷிவரன் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
