சிவகார்த்திகேயனால் உயிர் பிழைத்த ஆஸ்கர் விருது வென்ற ரகு யானை.! வெளிவந்த ஆச்சரியமான தகவல்..

தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் பட யானை நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவினால் தான் உயிர் பிழைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுகலை காட்டில் இருக்கும் யானைகளை வைத்து தான் The Elephant Whisperers என்ற குறும்படம் படம் எடுக்கப்பட்டது.

அதில் முதுகலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பங்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானைக் குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குட்டிகளை பொம்மண் தனது மனைவி பெள்ளியுடன் இணைந்து வளர்த்து வருகிறார். மேலும் அந்த யானை குட்டைகளை எப்படி எல்லாம் பராமரிக்கிறார்கள், அதன் மீது எப்படி எல்லாம் அன்பு செலுத்துகிறார்கள் என்பது குறித்த தகவலை மையமாக வைத்ததால் இந்த படம் உருவானது.

இந்த படம் கடந்த 2022ஆம் ஆண்டு நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இதனைப் பார்த்துவிட்டு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் பாராட்டு இருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இவ்வாறு இந்த படத்தின் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமை கிடைத்த நிலையில் உலக அளவில் கொண்டாடப்பட்ட வருகிறது.

movie
movie

இவ்வாறு இந்த யானைகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்திருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆவணப்படத்தில் இடம்பெற்று இருந்த இரண்டு யானைகளில் ரகு என்ற யானை கடந்த 2017ஆம் ஆண்டு ஓசூர் அருகே மீட்டெடுக்கப்பட்டிருந்தது. இந்த யானை குட்டி தாயிடம் இருந்து பிரிந்து நாய்களிடம் கடிபட்டு ரத்த காயங்களுடன் சுற்றிக் கொண்டிருக்க அதனை வனத்துறையினர் மீட்டு முது மலைக்கு கொண்டு சென்றனர்.

yaanai
yaanai

அந்த நேரத்தில் ரகு யானை மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது அந்த சமயத்தில் தகவல் தெரிந்துக் கொண்ட சிவகார்த்திகேயன் அந்த யானை குட்டிக்கு தேவையான உதவியை செய்திருக்கிறார். இவ்வாறு இதன் மூலம்தான் யானை கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி இயல்பு நிலைக்கு வந்ததாம்.

இவ்வாறு சமீபத்தில் ஆஸ்கர் விருதை பெற்ற ரகு என்ற யானைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்ததனால் தான் பிழைத்து இருக்கிறது என்ற தகவலை வனத்துறை அதிகாரி ஒருவர் சமீப பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment