திடீரென சம்பளத்தை உயர்த்திய ராகவா லாரன்ஸ் – “சந்திரமுகி 2′ படத்திற்காக வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா.?

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களை பற்றி தான் தினமும் செய்திகள் வெளி வருகிறது. அதையேதான் ரசிகர்கள் ஆர்வமாகவும் பார்க்கின்றனர் ஆனால் வளர்ந்து வரும் நடிகர் மற்றும் திறமையான நடிகர்களை ரசிகர்கள் கொண்டாடத் தவிர்க்கிறார்கள். அந்த லிஸ்டில் இருந்து வருபவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இவர் தமிழ் சினிமா உலகில் நடன கலைஞராக தனது திறமையை வெளிக்காட்டி ஒரு கட்டத்தில் ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடினார். இருப்பினும் ஒரு சமயத்தில் இவரை வைத்து படம் பண்ண பலரும் தயங்கியதால் இவரே தனது படத்தை எடுக்க இயக்குனர் அவதாரமும் எடுத்தார் அப்படி இவர் காஞ்சனா சீரியஸ் எடுத்தார் அந்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி பெற்றதது.

தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மக்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கினார். தற்பொழுது இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்துள்ளன அந்த வகையில் ராகவா லாரன்ஸ் கையில் ருத்ரன், சந்திரமுகி 2, துர்கா அதிகாரம் ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது சந்திரமுகி 2 தான்..

ஏனென்றால் சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் என்பது குறிப்பிடத்தக்கது ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் அவருடன் கை கோர்த்து ராதிகா சரத்குமார், வடிவேலு மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் ஷூட்டிங் மிகப்பெரிய அரண்மனை செட் போன்று போடப்பட்டு படம்..

விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்காக ராகவா லாரன்ஸ் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் ராகவா லாரன்ஸ் இந்த படத்திற்காக மட்டுமே சுமார் 27 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment