தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் ராகவா லாரன்ஸ் இவர் தற்பொழுது சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்த வருகிறார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் அவ்வபொழுது பேட்டி கொடுப்பது வழக்கம் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் சினிமாவில் வளர்ந்தது எப்படி என்பது குறித்து விலாவாரியாக பேசி உள்ளார்..
ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது அவருக்கு சாப்பாடு பரிமாறுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை ராகவா லாரன்ஸ் மிகுந்த ஈடுபாடுடன் செய்திருக்கிறார் அப்பொழுது டான்ஸ் நல்ல ஆடுவதை தெரிந்து கொண்ட ரஜினி அவரை ஆடச் சொல்லி பார்த்திருப்பார். இதை பார்த்த சூப்பர் ஸ்டார் நல்லா இருக்கிறது.
என்ற ஒரு வார்த்தை மட்டுமே சொல்லிவிட்டு கிளம்பி விடுவாராம் ஆனால் ரஜினி தன்னிடம் வந்து கை கொடுப்பார், கட்டிப்பிடிப்பார் என்ற ஆசையில் இருக்கிறார் ஏனென்றால் ராகவா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர். அந்த சமயத்தில் ரஜினியை போல் டாப் நடிகராக இருந்த சரத்குமார் முன்பு ஆடிய போது கை கொடுத்தது மட்டுமின்றி நூறு ரூபாய் கொடுத்தும் ஊக்குவித்து விடுவாராம் அது கூட ரஜினி பண்ணாதது ரொம்ப வருத்தமாக போயிருந்ததாம்..
ஆனால் ரஜினி ராகவா லாரன்ஸ்க்கு மறைமுகமாக ஒரு உதவி செய்தார் கடைசி நாள் ஷூட்டிங் நடந்த போது ராகவா லாரன்ஸை அழைத்து ரஜினி தன்னுடைய வீட்டிற்கு வந்து சந்திக்கும்படி சொன்னாராம் அந்த நிமிடம் லாரன்ஸ் உறைந்த நிலையில் மீண்டும் ரஜினி நாளைக்கு என்னுடைய வீட்டிற்கு வந்து விடுவீர்களா என்று கேட்டார்.
அதற்கு வந்து விடுகிறேன் சார் என கூறியிருக்கிறார் ரஜினியின் வீட்டிற்கு சென்ற பிறகு அவர் ஒரு கடிதத்தை எழுதி இதை எடுத்துக் கொண்டு டான்சர்ஸ் யூனியன் இடம் கொடுங்கள் உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கை இருக்கிறது என சொன்னாராம் அதன் பிறகு பிரபுதேவா மாஸ்டரிடம் ரஜினி பேசி லாரன்ஸை அவருக்கு உதவியாளராக வைத்துக் கொள்ளும்படி பரிந்துரை செய்துயுள்ளார்.
பிறகு பிரபு தேவா வீட்டில் இருந்தும் அழைப்பு வந்திருக்கிறது அதன் பிறகு தான் பிரபு தேவாவுடன் லாரன்ஸ் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு ரஜினி மூலம் கிடைத்தது. இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய திறமையை பார்த்து சரியான இடத்திற்கு கொண்டு போய் சேர்த்தார் அவர் அன்று என்னை பார்க்கவில்லை என்றால் இன்று நான் இல்லை.. தன்னை தூக்கி விட்டு அழகு பார்த்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என கூறினார்.