பேய் கதைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு action கதையில் குதித்த ராகவா லாரான்ஸ் – வைரலாகும் மோஷன் போஸ்டர்.

தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் ஹீரோ, ஹீரோயினையும் தாண்டி தற்போது இயக்குனர்களும் நல்ல மார்கெட்டை கையில் வைத்துள்ளனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறந்த படைப்புகளை கொடுத்து வேற லெவெலில் வலம் வருவர் வெற்றி மாறன்.

தற்போது இவரது படத்தில் பணியாற்ற பல்வேறு நடிகர், நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் இப்படியிருக்க அசுரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அவர் பல்வேறு நடிகர்களுடன் பணியாற்றி வருகிறார்.

அதனால் அந்த திரைப்படங்களின் ஒவ்வொன்றையும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது இப்படி இருக்க இவர் இயக்குவதை யும் தாண்டி படங்களை  தயாரிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் இவர் காக்கா முட்டை, வட சென்னை, விசாரணை  போன்ற படங்களை கிராஸ் ரூட் என்ற கம்பெனியின் சார்பில் தயாரித்து இருந்த மாறன் தற்போது மீண்டும் அந்த கம்பெனியுடன் இணைந்து அதிகாரம் என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.

இவருடன் இணைந்து இன்னொரு கம்பெனியும் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. அந்த திரைப்படத்தை துரை செந்தில் என்பவர் இயக்க உள்ளார் இவர் இதற்கு முன்பு எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிபிடதக்கது. அந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரான்ஸ் நடிக்க உள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் என தெரியவருகிறது. படபிடிப்பு 50 நாள்கள் மலேசியாவிலும் மீதி நாட்களில் இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்க படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

 

Leave a Comment