அகோரி கெட்டப்பில் ராகவா லாரன்ஸ் வைரலாகும் துர்கா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! சும்மா மிரட்டுறாரே

ragava-lawrance
ragava-lawrance

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளியாகிய காஞ்சனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. காஞ்சனா திரை படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதால் அதனை தொடர்ந்து அடுத்தடுத்த பாகத்தை இயக்கி வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில் இந்தியில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி  நடிப்பில் காஞ்சனா முதல் பாகத்தை ரீமேக் செய்தார்கள். அதற்கு இலட்சுமிபாம் என்ற டைட்டில் வைத்து OTT இணையதளத்தில் வெளியிட்டார்கள் இந்த திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது.

ராகவா லாரன்ஸ் நடிகர் மட்டுமல்லாமல் நடன இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் ராகவா லாரன்ஸ் திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. இந்தநிலையில் பொல்லாதவன்  என சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் ருத்ரன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் ப்ரியா பவனி சங்கர் ராகவராலன்ஸ் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் பி வாசு இயக்கத்தில் உருவாகிவரும் சந்திரமுகி இரண்டாவது பாகத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

ராகவா லாரன்ஸ் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் படத்தை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இந்த நிலையில் தனது தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை  தயாரித்து வருகிறார் அந்தத் திரைப்படத்திற்கு துர்கா என பெயரிட்டுள்ளார். இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த போஸ்டரில் ராகவராலன்ஸ் நீண்ட தாடியுடன் அகோரியாக காட்சியளிக்கிறார். இதோ அந்த புகைப்படம்.