இதுவரை மீடியா வெளிச்சமே படாத ராகவா லாரன்ஸின் மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் மார்டனாக இருக்கும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், நடன அமைப்பாளராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் தனது திரையுலக வாழ்க்கையை டான்ஸ் மாஸ்டராக தொடங்கி இன்று சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபுதேவாவிற்கு அட்டது சிறந்த நடன இயக்குனர் என்றால் அது ராகவா லாரன்ஸ் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இவர் தமிழ் திரையுலகில் அற்புதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அதுவும் முக்கியமாக முனி,காஞ்சனா போன்ற பேய் படங்களின் மூலம் தான் அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறினார். இந்த நிலையில் தற்போது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் பல ஆயிரம் மக்களுக்கு உதவி புரிந்து வருகிறார். தற்பொழுது உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா தற்பொழுது தமிழகத்தையும் அதிகமாக பாதித்து வருகிறது இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் நிவாரண நிதிக்கு நடிகராக ரூபாய் 3 கோடி, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம், தமிழக முதல்வர் நிதிக்காக ரூபாய் 50 லட்சம், கொடுத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சம், நடனக் கலைஞர்களுக்கான ரூபாய் 50 லட்சம், மேலும் மாற்றுத் திறனாளிகளுக்காக ரூபாய் 50 லட்சம், ஏழை மக்களுக்காக 75 லட்சமும் வழங்கி உள்ளார் என்பது பெருமை தகுந்த ஒரு விஷயமாகும்.

raghava-lawrence daughter111
raghava-lawrence daughter111

அதுமட்டுமல்லாமல் தன் வீட்டிலேயே பல மாற்றுத்திறனாளி குழந்தைகளையும், அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனாலேயே ரசிகர்களுக்கு பிடித்த ஒருவராக திகழ்ந்து வருகிறார். சிறந்த நடிகர் என்றால் அது ராகவா லாரன்ஸ் தான் எனவும் கூறப்படுகிறது.

raghava-lawrence daughter111
raghava-lawrence daughter111

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு மகள் உள்ளார் ஆனால் இவரை யாராலும் பார்த்திருக்க முடியாது. ஆனால் தற்போது ராகவாலாரன்ஸின் செல்லமகள் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படம் ரசிகர்களை. வெகுவாக கவர்ந்துள்ளது

இதோ அந்த புகைப்படம்.

raghava-lawrence daughter111
raghava-lawrence daughter111

Leave a Comment