அன்பு கட்டளையிட்ட ராகவா லாரன்ஸ் மறுவார்த்தை பேசாமல் உதவி செய்த தளபதி விஜய்.! ரெண்டு பேருக்குமே பெரிய மனசுதான்…

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பணியாற்றியுள்ளார்.

தற்பொழுது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் முதல் நாள் நல்ல வசூலை பெற்றாலும் போகப் போக கொஞ்சம் சருக்களை சந்தித்து வருகிறது. அப்படி இருக்கும் வகையில் ருத்ரன் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு பல மீடியாவுக்கு பேட்டியை கொடுத்துள்ளார் அந்த வகையில் பிரபல மீடியாவுக்கு பேட்டி ஒன்றை கொடுத்த பொழுது பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து உள்ளார்.

தெலுங்கில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அழைப்பு வந்தது உடனே விஜய் உடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என கூறினார்கள். அதற்கு ராகவா லாரன்ஸ் என்னால் விஜய் உடன் நடனம் ஆட வேண்டும் என கேட்டவுடன் மறுக்க முடியவில்லை அதனால் கண்டிப்பாக ஆடுகிறேன் எனக் கூறிவிட்டாராம். படம் ரிலீஸ் ஆகி வெளியானது வேறு எந்த திரைப்படமும் கிடையாது திருமலை தான் அந்த திரைப்படத்தில் தான் ராகவா லாரன்ஸ் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் க்கு சென்றுள்ளார் அந்த சமயத்தில்  திருமலை திரைப்படம் வெளியாகி இருந்தது அப்பொழுது அங்கு உள்ள குழந்தைகள் கையால் அசைவுகாட்டி விஜய் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார்கள். ராகவா லாரன்ஸ் என்ன செய்வது என்று தெரியாமல் உடனே விஜய்க்கு போன் செய்துள்ளார். நண்பா பசங்க எல்லாம் படம் பாக்கணும்ன்னு ஆசைப்படுறாங்க ஏதாவது ஒரு தியேட்டரில் டிக்கெட் கிடைக்குமா என கேட்டுள்ளார்.

அதெல்லாம் வேண்டாம் அவங்களுக்கு தனியா ஒரு காட்சியை ரெடி பண்ணிடலாம் என விஜய் கூறியுள்ளார் பின்பு ராகவா லாரன்ஸ் டிரஸ்டில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விஜயின் திரைப்படத்தை பார்க்க ஒரு காட்சியை விஜய் ரெடி செய்துள்ளார். இப்படி அந்த குழந்தைகளுக்காக விஜய் தன்னால் முடிந்த அளவு உதவியும் செய்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் கேட்டவுடன் மறுப்பு தெரிவிக்காமல் விஜய் உதவியுள்ளதை ராகவா லாரன்ஸ் இன்று வரை கூறிக் கொண்டே இருக்கிறார். இப்படி இருவருக்கும் மிகப்பெரிய மனசு என விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment