தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பினால் வளர்ந்து வரும் நடிகர்களின் லிஸ்டில் இருப்பவர் ராகவா லாரன்ஸ், தன்னால் முடிந்த வரை ஏழை குடும்பத்தினருக்கும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கும் தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறார். ராகவா லாரன்சை கஷ்டம் என தேடி வந்தால் கண்டிப்பாக உதவி செய்வார் அப்படி ஒரு எண்ணம் அனைவரிடமும் இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் உதவுவார் என்று நம்பி வந்த ராஜபாளையத்தை சேர்ந்த குரு லட்சுமி தனது மகன் மற்றும் தம்பியுடன் சென்னை கிளம்பி வந்துள்ளார்.

ஆனால் ராகவா லாரன்ஸ் அட்ரஸ் தெரியாமல் சென்னை வந்த அந்தக் குடும்பத்தினர் பிளாட்பார்மில் சில நாட்கள் தங்கி உள்ளார்கள், இதைப் பற்றி பிரபல தமிழ் ஊடகம் ஒன்று இணையதளத்தில் வெளியிட்டது, அதைக் கண்ட ராகவா லாரன்ஸ் பதறிப்போய் அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தார் பின்பு உதவியும் செய்துள்ளார்.

சமீபத்தில் இதைப் பற்றி ராகவா லாரன்ஸ் கூறுகையில், தன்னை நம்பி வந்தவர்கள் இப்படி இருக்கிறார்களே என அவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் பின்பு அவர்களை அழைத்து பேசினேன், அந்த குரு லட்சுமியின் மகன் ஒரு வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அதற்காக உதவி கோரி தான் வந்துள்ளார்கள், நானும் என்னால் முடிந்த உதவியை நிச்சயமாக செய்வேன் என கூறினார்.