ஐ லவ் யூ புருஷா.! திருமண நாளான இன்று சுவாரசியமான வீடியோவை பதிவிட்ட ராதிகா.! குவியும் பாராட்டுக்கள்…

தென்னிந்திய சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. இவர் படங்களில் மட்டும் இல்லாமல் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். அப்படி சின்ன திரையில் சித்தி என்ற சீரியலில் நடித்து இன்று மக்கள் மத்தியில் நீங்கா இடபிடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல சீரியல்களை தயாரித்து வருகிறார். மேலும் ஒரு சில சீரியலை இயக்கி நடித்தும் வருகிறார். இவர் நடிகையாக மட்டும் இல்லாமல் அரசியல் வாதியாகவும் இருந்து வருகிறார். இப்படி பல விதமாக தன்னுடைய உழைப்பின் மூலம் இன்று உயர்ந்து இருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.

இதனை தொடர்ந்து நடிகை ராதிகா அவர்கள் தனது 22 வது திருமண நாளான நேற்று புகைபடம் மற்றும் வீடியோவை சமுக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார் இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக இருந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் சரத்குமார் அவர்கள் கடைசியாக வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றினடை போடும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருப்பார்.

இப்படி குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் நடிகர் சரத்குமார் ராதிகாவை திருமணம் செய்து நேற்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த திருமண நாளை கொண்டாடும் விதமாக நடிகை ராதிகா அவர்கள் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களுடன் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை பார்த்து பல பிரபலங்களும் ரசிகர்களும் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment