அழகுக்கு அழகு சேர்க்க அழகுசாதன கடையை திறந்து வாய்த்த ராதிகா.! யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இன்று வரையிலும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராதிகா.

இவர் தற்போது சின்னத்திரையில் சித்தி சீரியலில் நடித்து வந்தார் ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை இவர் விரைவில் நாடகத்தை விட்டு விலக உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் நடிகை ராதிகா பிரபல சின்னத்திரை நடிகையின் கடையை திறந்து வைத்துள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இளவரசி சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிகை சந்தோஷி.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சந்தோஷி தனது திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் சந்தோஷி சென்னையில் தனக்கென சொந்தமான பியூட்டி பார்லர் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அந்த கடையை ராதிகா திறந்துள்ளார்.

மட்டுமல்லாமல் கடை திறப்பு விழாவிற்கு பல பிரபல நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டு சந்தோஷிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். அவ்வபொது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

santhoshi
santhoshi