அட நம்ப ராதிகாவின் மகளா இது நம்பவே முடியலையே இப்படி மாறிட்டாங்க.! படுவேகமாக வைரலாகும் புகைப்படம்

0

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா, இவர் தற்பொழுது radaan media works என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார் இந்த நிறுவனத்தின் மூலம் பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சினிமாவில் நடிப்பதை தாண்டி சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர், நடிகை ராதிகா எம் ஆர் ராதா அவரின் மூன்றாம் மனைவி கீதா விற்கும் பிறந்தவர், அதேபோல் நடிகை நிரோஷா, திரைப்பட தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள்.

இவர் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்வதற்கு முன்பு இருமுறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார், முதல்முறை மலையாள நடிகரும் இரண்டாவது முறை இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரையும் திருமணம் செய்திருந்தார், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பொழுது ஹார்டி உடன் இவருக்கு ராயன் ஹார்டி என்ற பெண் குழந்தை இருந்தது.

அதன் பிறகுதான் 2001 ஆம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார், இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரேயான் னுக்கும் கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுவிற்கும்  திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை இருக்கின்ற நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

rayanemithun
rayanemithun

இவர் கர்ப்பமாக இருக்கும் போது உடல் பருமனாகி குண்டாக காணப்பட்டார் ஆனால் தற்போது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார் அந்த புகைப்படங்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ராதிகாவின் மகள்.

rayanemithun
rayanemithun