விஜய் டிவியில் கடந்த ஒரு வாரமாக பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இரண்டும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவின் மாமனார் பிறந்த நாள் விழாவிற்காக பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பாக்யலட்சுமியின் வீட்டிற்கு வந்துள்ளது.
இந்த இரண்டு குடும்பங்களும் இணைந்து தற்போது ஒளிபரப்பாகிவரும் எபிசோடுகள் சுவாரசியமாக இருந்து வருகின்ற நிலையில் பாக்கியாவின் கணவர் கோபி திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்த நிலையில் பாக்கியத்திற்கு தெரியாமல் அவரது கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.
இந்த நிலையில் பாக்யாவின் மாமனார் பிறந்தநாள் விழாவிற்காக பாக்கியலட்சுமி மற்றும் தனம் இருவரும் இணைந்து ராதிகா வீட்டிற்குச் சென்று அவரை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்தனர் மேலும் பாக்கியா ராதிகாவிடம் நீங்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளவரையும் கூப்பிட்டு வாருங்கள் என கூறியுள்ளார்.
இதனால் ராதிகா கோபியிடம் அந்த பிறந்த நாள் விழாவிற்கு நம்ப இருவரும் கண்டிப்பாக போகவேண்டும் என கூறினார் ஆனால் கோபி ஏதேதோ சில காரணங்களை சொல்லி நழுவி விட்டார். இப்படி இந்த மெகா சங்கம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாளை தாத்தாவின் பிறந்தநாள் பங்ஷன் ஆரம்பமாகியுள்ளது.
அப்போது ராதிகா அவரது மகள் மயூவை அழைத்துக் கொண்டு வீட்டின் முன் காரிலிருந்து இறங்கி வருகிறான் அப்போது கோபி ராதிகாவை பார்த்துவிட்டு திரு திருவென முழித்துக் கொண்டே எப்படி இந்த இடத்தில் இருந்து தப்பிப்பது என யோசிக்கிறார். இதனால்நாளை ஒளிபரப்பாக உள்ள எபிசோடில் கோபி ராதிகாவிடம் மாட்டுவாரா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.