இதற்காக தான் திருமணம் செய்து கொண்டேன்!! ஷாக் கொடுத்த நடிகை ராதிகா ஆப்தே. !!

0

Radhika apte married her husband for this reason: நடிகை ராதிகா ஆப்தே ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல்லாது ஹிந்தியிலும் த வெயிட்டிங் ரூம், ஹராம், லயன், பேட்மேன், அந்தாதுன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கு, பெங்காலி போன்ற திரைப்படங்களிலும் நடித்துக்கண்டிருக்கிறார். ராதிகா ஆப்தே சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பது உண்மை எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல்  மீ டு விவகாரங்களுக்கு ஆதரவு அளித்தார். மேலும் பிரபல இயக்குனர் ஒருவர் மீது  பாலியல் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் 2012 ஆம் ஆண்டு தனது காதலரான இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். லாக் டவுனில் லண்டனில் மாட்டியா அவர் இன்னும் அங்கே அவரது கணவருடனே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி நடிகர் விக்ராந்த் மாஸேவுடன் பேசுகையில் ராதிகா ஆப்தே அவர்கள் கூறியதாவது. திருமணத்தில் தனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை எனவும் லண்டனில் விசா பெறுவது மிக கடினம் என்பதால் அவரை திருமணம் செய்து கொண்டேன் என அவர் கூறியது தற்போது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.