ராதிகாவை பாஞ்சாலி எனக்கூறி வாழ்த்திய பிரபல இயக்குனர்.! சமூக வலைத்தளத்தில் வெடிக்கும் பிரச்சனை

radhika sarath kumar
radhika sarath kumar

Radhika sarathkumar 42 years in cinema : நடிகை ராதிகா எம் ஆர் ராதா அவர்களுக்கும் அவரின் மூன்றாவது மனைவி கீதா விற்கும் பிறந்தவர், இவருடன் நிரோஷா திரைப்பட தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் உடன் பிறந்தவர்கள். அதேபோல் நடிகர் ராதாரவி அவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார். சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.

இவரின் திரைப்பயணம் கிட்டத்திட்ட 42 வருடங்கள் ஆன நிலையில் ராதிகாவிற்கு சமூகவலைதளத்தில் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள், அதேபோல் இவரின் 42 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் ஒரு வருடம் கூட நடிக்காமல் இறந்ததே  இல்லையாம். இதைக் கேள்விப்பட்ட பல ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.

நடிகை ராதிகா சினிமாவில் மட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தவர், அதுவும் திருமண வாழ்க்கையில் தான் பெரும் சர்ச்சையை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்து தற்பொழுத குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

நடிகை ராதிகா அவர்களுக்கு கிட்டத்தட்ட மூன்று திருமணங்கள் ஆகிவிட்டன, மூன்றாவது முறையாக பிரபல நடிகருமான அரசியல் தலைவருமான சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார் நீண்டகலமாக இவருடன் தான் வாழ்ந்துவருகிறார். நடிகை ராதிகா சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியலிலும் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் சித்தி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் ராதிகாவின் 42 வருட சினிமா வாழ்க்கையை வாழ்த்தும் விதமாக இயக்குனர் பாரதிராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாஞ்சாலியின் பயணம் இன்னும் முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார், ராதிகா பாஞ்சாலி படத்தில் நடித்திருந்தாலும் இந்த நேரத்தில் பாஞ்சாலி என்ற வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொன்னது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.