பூக்களோடு பூக்களாய் கவுன் அணிந்து நயன்தாரா போல் வித்தியாசமாக போஸ் கொடுக்கும் ரட்சிதா.! வைரலாகும் புகைப்படம்.

0

வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இவர் சரவணன் மீனாட்சி சீரியலுக்கு முன்பு பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து இருந்தார் ஆனால் அந்த சீரியல் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை.  இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்கள் விரும்பும் வகையில் அதிகப்படியான காதல் காட்சிகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியல் இவருக்கு மாபெரும் பிரபலத்தை தந்தது.

சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்குப் பிறகு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்ற ஆரம்பித்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.  இப்படிப்பட்ட நிலையில் பிரபல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியலின் தனது கணவருடன் இணைந்து நடித்து வந்து இல்லதரசிகள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

rachitha 5
rachitha 5

வெள்ளித்திரை நடிகைகள் அளவிற்கு இவரும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்து வருகிறார். சமீபகாலங்களாக சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

rachirtha
rachirtha