இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அடங்கவே அடங்காத விஜய்.! பிரபல நடிகர் பளிச் பேட்டி..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய் ஒரு கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார், இந்த நிலையில் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது, தற்பொழுது படத்தின் டப்பிங் வேலைகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

விஜயுடன் இணைந்து மாளவிகா மோகனன் விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா கௌரி கிஷன் என முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள், படத்திலிருந்து முதல் மூன்று போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டார்கள், இதனை தொடர்ந்து பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று விஜய் சொந்த குரலில் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியில் டீசர் குறித்த கேள்வியை ரசிகர்கள் முன்வைத்தார்கள் அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் டீசர்க்கானா பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.

விஜய்யை ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களுக்கு பிடிக்கும். அவ்வபொழுது சினிமா பிரபலங்கள் விஜய் புகழ்ந்து பேசியதை அனைவரும் கேட்டிருப்போம், அந்தவகையில் விஜயுடன் பல திரைப் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்த நடிகரும் நடன இயக்குனருமான ராபர்ட் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் அண்ணன் லவ்டுடே காலத்தில் நடனம் ஆடினார். ஆனால் தற்போதும் அந்த எனர்ஜி குறையாமல் அதைவிட வெறித்தனமாக ஆடுகிறார்.

விஜய் அண்ணா டான்ஸ் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கூட அடங்க மாட்டேங்குறாரு என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் பல நடிகைகள் விஜயுடன் நடனம் ஆடுவதற்கு கொஞ்சம் தயங்குவார்கள் ஏனென்றால் விஜய் அந்தளவு எனர்ஜியுடன் நடனம் ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Leave a Comment