ராயன் திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.?

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம் ராயன் இந்த திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சுந்திப் கிஷன், எஸ் ஜே சூர்யா செல்வ ராகவன் துஷாரா விஜயன், அனிதா, அபர்ணா பாலமுரளி, என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்திருந்தார்கள்.

ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய பாபாண்டி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதனால் ராயன் திரைப்படமும் நல்ல வரவேற்பு பெரும் எதிர்பார்தார்கள் அதே போல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது ராயன்.

ஒரு சில ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் பல ரசிகர்கள் பாசிடிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்கள் மேலும் ராயன் திரைப்படம் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தியது இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

அந்த வகையில் ராயன் திரைப்படம் உலக அளவில் 102 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது உலக அளவில் பட்டையை கிளப்பிய ராயன் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகிய ஏழு நாட்கள் கடந்துள்ளது இந்த நிலையில் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸில் 52 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் கேரியரில் இந்த வசூல் மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.