பள்ளிப் பருவத்தில் ராசி கண்ணா எப்படி இருந்தது தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.

Raasi khanna : நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர், தெலுங்கில் இவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், இந்த நிலையில் தமிழில் இவர் இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் இவர் அறிமுகமான முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர் கூட்டத்தை பெற்றார், இதனை தொடர்ந்து அடங்கமறு திரைப்படத்தில் நடித்தார் பின்பு அயோக்கியா, சங்கத்தமிழன் ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார், தற்பொழுது இவர் சைத்தான் கே பச்சான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது அதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிய நிலையில் இருக்கிறார்கள், வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் போரடிக்காமல் இருப்பதற்கு தங்களுடைய பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை ராசி கண்ணா பள்ளிப்பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் சோடாபுட்டி கண்ணாடி போட்ட பெண்ணா இப்படி நடிகையாக வலம் வருவது என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

rashikanna

Leave a Comment

Exit mobile version