பலரை தூக்கிவிட்ட என்னால் என் மகன்களை கரை சேர்க்க முடியல!! வருத்தத்தில் ஆர்பி சவுத்ரி

0

R P Chowdry super good flim production company: தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பின் சார்பில் 90க்கும மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது ப்ரொடக்ஷனில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதோடு மட்டுமல்லாமல் இவர் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி தற்போது அவர்கள் முன்னணி அந்தஸ்தைப் பெற்று உள்ளனர். மேலும் இவர் தயாரிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் குடும்பத்தோடு பார்க்கும் திரைப்படமாகவே இருந்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல திரைப்படங்களை தயாரித்த இவருக்கு இவரது இரண்டு மகன்களையும் அவர் நினைத்தபடி பெரிய இடத்திற்கு கொண்டு வரமுடியவில்லை. இவரின் இரண்டு மகன்களான ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

ஜித்தன் ரமேஷ் சினிமாவிற்கு வந்த தடம் தெரியாமல் சீக்கிரமே சினிமாவை விட்டு வாய்ப்பு கிடைக்காததால் விலகிவட்டார். மேலும் அவரது சகோதரரான ஜீவாவும் வெற்றி படங்களை கொடுத்தாலும் இன்னும் சினிமாவில் போராடி கொண்டுதான் இருக்கிறார். இவரால் இன்னும் முன்னணி அந்தஸ்தை பெற முடியவில்லை.

90 திரைப்படங்களை தயாரித்த ஒரு தயாரிப்பாளரால் தனது மகனை வைத்து நல்ல படம் எடுக்க முடியவில்லையா என கேள்விகேட்கின்றனர்.