நீங்கள் சிங்குள் தானா என ரசிகரின் கேள்விக்கு!! கடுப்புடன் பதில் அளித்த ரைசா.

actress Raiza wilson tensed towards her fan: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இதனைதொடர்ந்து அவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல்  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக  இருக்கும் இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தயங்காமல் பதில் அளித்து வருவார். ரசிகர்கள் ரைசாவிடம் பேசும் போது ஹரிஷ் கல்யாண் எப்படி உள்ளார் என்று கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

பியார் பிரேமா காதல் படத்தில் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் போல் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறது என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டார்கள். மேலும் விளையாட்டாக பேசும் ரைசா ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஹரிஷ் கல்யானை  திருமணம் செய்து கொள்ளப்போவதாக விளையாட்டாக பதிலளித்துள்ளார்.

ஆனால் இது சமூகவலைதளத்தில் பரபரப்பாக ஆனதால். ஹரிஷ் கல்யாண் ரைசாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ரசிகர்களிடம் பேசும்போது தேவைஇல்லாமல் லூஸ் டாக் விட வேண்டாமென கூறியுள்ளார்.

இந்நிலையில் ரைசாவிடம் பேசிய ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிள் தானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த ரைசா ஏம்பா நீங்க வேற எரியிற நெருப்புல பெட்ரோல் ஊத்தாதீங்க என்று கூறியுள்ளார்.

தற்போது இந்த செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment