பிக்பாஸ் 6 -ல் என்ட்ரி கொடுக்கும் கிளாமர் குயின்கள்.? குஷியில் ரசிகர்கள்.

விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஒவ்வொரு சீசனும் 100 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த ஐந்து சீசனையும் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறு துறையில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், பாடகர், நடனக் கலைஞர், நாடக கலைஞர், சின்னத்திரை கலைஞர்கள், செய்தி வாசிப்பாளர்கள் போன்ற பலரும் கலந்து கொள்வார்கள்.

அப்படி பல பேர் அவர்களது கனவை நோக்கி பயணிக்க பிக் பாஸ் நிகழ்ச்சி அடித்தளமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் முகம் தெரியாத பல பிரபலங்கள்.. கலந்து கொண்டு தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் குடிகொண்டு வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதுவரை பிக் பாஸ் 6 யில் விஜே ரக்ஷன், பாடகி ராஜலட்சுமி, டிடி போன்ற சில பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்ற நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் கவர்ச்சி நாயகி தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

நடிகை தர்ஷா குப்தா சின்னத்திரையில் சீரியல் நடிகையாக தனது பயணத்தை தொடங்கி பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் சோசியல் மீடியாவில் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் மூலம் எண்ணற்ற ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டவர். இவர் தற்போது பிக் பாஸில் கலந்து கொள்ள உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Leave a Comment