ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர் ‘குயின்’ டீசர் வெளியானது.!

0

கௌதம் வாசுதேவ மேனன் குயின் எனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரியல் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வலைதள தொடர் குயின், கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்குகிறார், இதில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம் ஜி ஆர் ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்கள் பலர் ஜெயலலிதாவின் சுயசரிதத்தை திரைப்படமாக்க முன்வந்தனர்.

இருப்பினும் இந்த திரைப்படத்தை வெப் சீரியஸாக இயக்கி வருகிறார் கௌதம் வாசுதேவ மேனன், இந்த வெப் சீரியலின் சில எபிசோட்களை கிடாரி திரைப்பட இயக்குனர் பிரசாந்த் முருகேசன் தான் இயக்குகிறார். எம்எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் இந்த தொடரின் தலைப்புடனான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.

இந்தநிலையில் குயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இந்த திரைப்படத்தின் 26 நொடிகள் கொண்ட டீசர் தற்போது வெளியாகி உள்ளது, இதை அதிகாரப்பூர்வமாக எம்எக்ஸ் பிளேயர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் அவர்கள் அறிவித்ததாவது“மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி, சினிமாவின் சூப்பர் ஸ்டார் கதாநாயகி, இளம் முதலமைச்சர். ஒரு மகாராணியின் கதையின் பரபரப்பான பக்கங்கள் உங்களுக்காகவே! “ என டீசரை வெளியிட்டு உள்ளார்கள்